முகப்பு
தமிழ்நாடு

வேட்பாளர்கள் தோற்றால் மாவட்ட செயலர் பதவி நீக்கம்!

நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 அக்டோபர் 2023, 1:08 pm IST
பகிர்:

நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று (அக்.1) நடைபெற்றது.

இதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். 

Advertisement

Advertisement

அப்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். 

தொகுதிப் பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.