முகப்பு
தமிழ்நாடு

சிவாஜி கணேசனின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:16 PM
பகிர்:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த சிவாஜி கணேசன் தமிழில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நடிகர்திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் போற்றி அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →