தமிழ்நாடு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பொருந்தாது!

DIN

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளது. 

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கு மேலாக சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம் மீறியதாக, அதன் சிறுபான்மை உரிமையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (அக். 2) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது. தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டத்தின்படி கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினர் அந்தஸ்து குறித்து முடிவெடுக்க அந்த அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், மாநில அரசு தலையிட முடியாது எனக்கூறி அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மேலூரில் முப்பெரும் விழா

திறனை அறி, திசையை தீா்மானி’ நூல் வெளியீட்டு விழா

குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் சென்ற பேருந்து

SCROLL FOR NEXT