படம்: ட்விட்டர் 
தமிழ்நாடு

நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு!

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினர்.

DIN

கோவை: கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினர்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக தலைமை கடந்த மாதம் அறிவித்தது. மேலும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உடனிருந்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு முதல்முறையாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT