கோப்புப்படம் 
தமிழ்நாடு

அக்.12ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. 

DIN

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. 

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. 

கடந்த செப். 29 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபா் 15 - தேதி ஆம் வரை தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆணையம் உறுதி செய்தது. அதேநேரத்தில் தண்ணீரை விடுவிப்பதில் சற்று இடைவெளி தேவை என்கிற கா்நாடகத்தின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது.

உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் மற்றும் காவிரி ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. 

முன்னதாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கடந்த செப். 26 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT