அண்ணாமலைக்கு உடல்நலக் குறைவு: நடைப்பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணம் அக்.16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணம் அக்.16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள்(அக்.6) முதல் மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், நடைப்பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் நடைப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
அண்ணாமலை மேலும் இரு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் நடைப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3-ஆவது கட்ட நடைப்பயணம் அக்.6-ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையம் பேரவைத் தொகுதியில் தொடங்க இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை(அக்.5) திட்டமிட்டபடி மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், திருத்தப்பட்ட நடைப்பயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.