முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதன்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதன்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:05 AM
கோப்புப்படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதன்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரல் மழை பெய்த நிலையில், 3 நாள்களாக பல்வேறு இடங்களில் கனமழையாக மாறியுள்ளது. திங்கள்கிழமை மாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. அதேபோல், ஆறுகளில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகினர்.

இதனால், கன்னியாகுமரியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →