தமிழ்நாடு

உஜ்வாலா எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அதிகரிப்பு

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை மத்திய அரசு 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

DIN


உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை மத்திய அரசு 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதன்படி, இனி ஒரு எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து பெறும்போது, மானியத் தொகை 200க்கு பதிலாக 300 ரூபாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விறகு அடுப்புக்கு பதிலாக எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ், 2016ஆம் ஆண்டு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அந்த திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவோருக்கான மானியத்தை அதிகரித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பினை வெளியிட்டார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

SCROLL FOR NEXT