தமிழ்நாடு

ஹேக் செய்யப்பட்ட முரசொலி முகநூல் பக்கம்

DIN

முரசொலி முகநூல் பக்கத்தை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டுவதாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரபலங்களின் முகநூல் பக்கங்களை மர்மநபர்கள் அவ்வப்போது ஹேக் செய்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. பின்னர் ஹேக் செய்யப்பட்ட பக்கங்களை சம்மந்தபட்டவர்கள் வல்லுநர்களின் உதவியுடன் மீட்பர்.

இந்த நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி முகநூல் பக்கம் மர்ம நபர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளிதழ் மேலாளர் சார்பில் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முரசொலியின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்துள்ள மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஹேக் செய்யப்பட்ட முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை மர்மநபர்கள் பதிவேற்றம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT