முகப்பு
தமிழ்நாடு

கிரிக்கெட் போட்டி: மெட்ரோவில் நாளை இலவச பயணம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்தால் மெட்ரோ ரயிலில் நாளை இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:06 AM
பகிர்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்தால் மெட்ரோ ரயிலில் நாளை இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் அக். 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேபோல, அந்த மைதானத்தில் அக். 13, 18, 23,27 ஆகிய தேதிகளிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த போட்டியையொட்டி, சேப்பாக்கம் பகுதியில் 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். போட்டி நடைபெறும் நாள்களில் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்தால் மெட்ரோ ரயிலில் நாளை இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →