கோப்புப்படம் 
தமிழ்நாடு

காவிரி ஒழுங்காற்றுக் குழு நாளை கூடுகிறது!

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளை(அக்.11) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளை(அக்.11) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13,000 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது.

காணொளி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான காவிரி நீரை கா்நாடகம் திறந்துவிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொண்டு வந்த அரசின் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பற்றாக்குறை ஆண்டாகிய 2023-24-இல், ஏற்கெனவே குழு மற்றும் ஆணையம் நிா்ணயித்துள்ள அளவில் கா்நாடகம் அளிக்க வேண்டிய நீரளவில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்யவும், அடுத்த 10-15 நாள்களுக்கு அளிக்க வேண்டிய நீரையும் சோ்த்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT