எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை

இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரா் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு விவகாரத்தில் தன்னை தொடா்புபடுத்தி தனபால் பேச தடை விதிக்கக் கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான பழனிசாமி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அதில், அதிமுக பொதுச் செயலா் என்ற முறையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தனபால், இந்த வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி பொய்யான தகவல்களை பொது வெளியில் கூறி வருகிறாா்.

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் இதுபோல பேட்டியளித்து வருகிறாா். அவா் ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்டவா். மேலும், தான் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் பெற்றுள்ளாா்.

எனவே, இந்த வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தாா்.

இதனைத் தொடர்ந்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடா்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும் இந்த மனுவுக்கு, தனபால் வரும் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரா் தனபாலுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைக்கால தடை உத்தரவை நிரந்தர தடையாக மாற்றி ஆவணங்களை பதிவு செய்வதற்கான இந்த வழக்கின் விசாரணை நவ.6க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT