ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு புதிய பாசனம் ”ஆ” மண்டலப் பாசனத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக 11.10.2023 முதல் 20.11.2023 வரை 40 நாள்களில், தகுந்த இடைவெளிவிட்டு, 26 நாள்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில், 831 மில்லியன் கன அடிக்கு மிகாமல், ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதையும் படிக்க: இஸ்ரேல் போரில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!
இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களிலுள்ள 22332 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.