தமிழ்நாடு

கல்லூரி மாணவர் பலி: ரூ.2 லட்சம் நிதியுதவி

DIN

கடலூர் சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி  அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடலூர் வட்டம், தேவனாம்பட்டினம் கிராமம் கடற்கரை சாலையில் நேற்று (11-10-2023) மதியம் அப்பகுதியிலுள்ள கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி முடிந்து ஷேர் ஆட்டோவில் கடலூருக்கு வந்துகொண்டிருந்தபோது,
எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பண்ருட்டி வட்டம், சிறுவத்தூர் (அ), மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், த/பெ.சரவணன் (வயது 20) என்ற மாணவர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிவு : ரூ.7 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

பங்கு வர்த்தகத்தில் தொடரும் சரிவு.. காரணம் என்ன?

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

SCROLL FOR NEXT