முகப்பு
மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

ஓமன் கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!

ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், 

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, ஏழுதேசம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் திரு. எல்.லெரின்ஷோ, த/பெ. கிளாரன்ஸ் என்பவர் 9-9-2023 அன்று ஓமன் நாட்டின் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மீனவர் எல்.லெரின்ஷோ அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →