முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக் கல்வித் துறை செயலர் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் உள்பட 5 ஐஏஎஸ்  அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் உள்பட 5 ஐஏஎஸ்  அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில், புதன்கிழமையன்று 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகளும், 16 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று பள்ளிக் கல்வித் துறை செயலர் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில், 

பள்ளிக் கல்வித் துறை செயலராக இருந்த காகர்லா உஷா,  தமிழ்நாடு சுற்றுலாத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலராக இருந்த குமரகுருபரன் பள்ளிக் கல்வித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், வணிக வரித்துறை முதன்மை செயலராக இருந்த தீரஜ்குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக, ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (டிட்கோ) மேலாண்மை இயக்குநராக சந்தீப் நந்தூரி நியிமக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →