முகப்பு
தமிழ்நாடு

அக்.17-ல் அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டம்

சென்னையில் அக்.17ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழ்நாடு

அக்.17-ல் அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டம்

சென்னையில் அக்.17ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

சென்னையில் அக்.17ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுகுறித்து கட்சியின் தலைமைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், வரும் 17ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 
 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →