சங்கர் ஜிவால் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DIN

சென்னை: சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவில், சென்னை பெருநகர வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிராங் டி.ரூபன், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆகவும் டி.ரமேஷ் அரும்பாக்கம் காவல் உதவி ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் தற்போது  மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.சி.பரத், நீலாங்கரை காவல் உதவி ஆணையராகவும், பாலகிருஷ்ண பிரபு, சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜா, சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையராகவும்,  தட்சணாமூர்த்தி, பூக்கடை காவல் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சரண்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருண், கோயம்பேடு காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுதர்சன், தி.நகர் காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT