அருட்தந்தை ஜான் பிரிட்டோ மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜான் பிரிட்டோ மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜான் பிரிட்டோ மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருட்தந்தை முனைவர் ஜான் பிரிட்டோ அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.
இதையும் படிக்க | தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?
தாவரவியல் வல்லுநரான அருட்தந்தை ஜான் பிரிட்டோ, ஏழை, எளிய மாணவர்கள் பலரும் உயர்கல்வி பெற உதவி, அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உறுதுணையாக இருந்துள்ளார்.
அவரது பிரிவால் வாடும் ஜெயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.