தமிழ்நாடு

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது : இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்

DIN

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குவதாக  இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரத்தில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வ தேச அறக்கட்டளை சார்பில் அவரது 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நசிமா மரைக்காயர் தலைமை வகித்தார். ஜெய்னுலாவுதீன் முன்னிலை வகித்தார். சேக் சலீம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் மற்றும் விஞ்ஞானி வெங்கடேஷ்வர் சர்மா மற்றும் சின்னத்துரை அப்துல்லா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 92-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவரது குடும்பத்துடன் உணவருந்தியது மகிழ்ச்சியாக உள்ளது.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் இருந்து வந்து நாட்டின் உயர்ந்த நிலைக்கு வந்தவர். நானும் கேரளாவில் மின் வசதிகள் கூட இல்லாத இடத்தில் இருந்து வந்து உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன். இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பல்வேறு மாணவ, மாணவிகள் பி.எஸ்.எல்.வி. மற்றும் சந்திராயான் போன்ற ராக்கெட்  மாதிரிகளை பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

SCROLL FOR NEXT