ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் தேசமடைந்துள்ள வீடு 
தமிழ்நாடு

கன்னியாகுமரி: ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து

கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் தொடரும் மழையால், கன்னியாகுமரி தோப்புவிளை பகுதியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து வீட்டின் ஒறு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. 

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் தொடரும் மழையால், கன்னியாகுமரி தோப்புவிளை பகுதியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து வீட்டின் ஒறு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. 

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை சில நாள்களாக தீவிரமடைந்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. 

இந்தநிலையில், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் சனிக்கிழமையும் பலத்த மழை பெய்தது. மலையோரத்தில் உள்ள களியல், திற்பரப்பு, திருநந்திக்கரை, குலசேகரம், சுருளகோடு உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.

இந்நிலையில், நான்காவது நாளாக பெய்து வரும் கனமழையால் தோப்புவிளை பகுதியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்தானது. 

ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் ராஜ்-மஞ்சு தம்பதியின் வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக தேசமடைந்துள்ளது. 

வீட்டின் ஒருபகுதி சேமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT