முகப்பு
தமிழ்நாடு

நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
கோப்புப் படம்.
பகிர்:

தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகாவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →