கோப்புப் படம் 
தமிழ்நாடு

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: அக்.28ல் அமைச்சர் ஆலோசனை

தீபாவளி பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக வருகிற அக். 28 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை மேற்கொள்கிறார். 

DIN

தீபாவளி பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக வருகிற அக். 28 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை மேற்கொள்கிறார். 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படியே இந்த ஆண்டும் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக அக். 28 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக, தீபாவளி பண்டிகைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வல்லபபாய் படேல் 150-ஆவது பிறந்த தினம்: மாவட்ட அளவில் பாத யாத்திரை நடத்த முடிவு

வடகாசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்

ஐந்து மாவட்டங்களில் 150 பள்ளிகளில் அறிவியல், கணிதம் செய்முறை பயிற்சி

உத்தமபாளையத்தில் நெல்பயிா் அறுவடைப் பணிகள் தீவிரம்

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT