கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை தாக்கியதில் 9 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DIN


நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை தாக்கியதில் 9 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப் படகுகளில் மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறையினரிடம் அனுமதி பெற்று செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளைர்கள் மீனவா்களை தாக்கி கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். மேலும், விசைப் படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இந்த நிலையில், கரை திரும்பிய மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தொடர்வது மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT