பங்காரு அடிகளார் மறைவையொட்டி சக்தி பீடத்தில் குவிந்த பக்தர்கள் 
தமிழ்நாடு

பங்காரு அடிகளார் மறைவு: மதுராந்தகத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.  

DIN


மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை (அக். 20) விடுமுறை அறிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று (அக்.19) மாலை காலமானார். அவருக்கு வயது 82.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதனிடையே பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்

டிராக்டா் மோதியதில் பெண் காயம்

காலனியாதிக்க கொள்கை

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

SCROLL FOR NEXT