தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை 3 நாள்களில் தொடங்கும்

DIN

வடகிழக்குப் பருவமழை அடுத்த 3 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை, இந்திய பகுதிகளில் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையைப் பொருத்தவரை சராசரி மழை அளவு 328 மி.மீ. ஆகும். ஆனால், பதிவான மழையின் அளவு 354 மி.மீ. இது இயல்பைவிட 8 சதவீதம் அதிகம்.

சென்னையைப் பொருத்தவரை சராசரி மழை அளவு 448 மி.மீ. பதிவான மழையின் அளவு 779 மி.மீ. இது இயல்பைவிட 74 சதவீதம் அதிகம்.

தற்போது கிழக்கு, வடகிழக்கு திசைகளில் இருந்து, தென்னிந்தியப் பகுதிகளில் காற்று வீசக்கூடிய நிலையில், வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் 3 தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும்.

தற்போது அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. இதுதவிர வங்கக் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்.21-ஆம் தேதி தொடங்கக்கூடும். இதன் காரணமாக, தொடக்க நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் வலு குறைந்து காணப்படும் என்றாா்.

அக்.25ஆம் தேதி வரை மிதமான மழை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளி முதல் புதன்கிழமை (அக்.20-25) வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT