தங்கம் விலை மீண்டும் எகிறியது: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை ரூ.1240 வரை உயா்ந்துள்ளது.
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை ரூ.1240 வரை உயா்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது அதிரடியாக மீண்டும் ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயா்ந்து ரூ.5,660-க்கும், சவரனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.45,280-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
இதையும் படிக்க | பீரோவில் பணம் சேர வேண்டுமா? இதோ சூட்சுமங்கள்!
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை:
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.82 உயா்ந்து ரூ.6,093-க்கும், சவரனுக்கு ரூ.656 உயா்ந்து ரூ.49,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது.