கரூர்: கரூரில் காவிரி ஆற்று பகுதிகளில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வாங்கல் அருகே மல்லம்பாளையத்திலும், நன்னியூா்புதூரிலும் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இந்த குவாரிகளில் விதிமுறை மீறல் நடைபெற்று வருவதாகவும் எழுந்த புகாரையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினா். மேலும் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்படும் அரசு மணல் குவாரியிலும் சோதனை மேற்கொண்டனா்.
இதையும் படிக்க | கோவையில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்!
தொடா்ந்து இந்த குவாரிகள் செயல்படாமல் இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவிட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், கரூரில் காவிரி ஆற்று பகுதிகளில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 11 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.