காவலர் வீர வணக்க நாளில் டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை 
தமிழ்நாடு

காவல்துறையினரின் தியாகங்களுக்கு வீர வணக்கங்கள்: மு.க. ஸ்டாலின்

காவலர் வீர வணக்க நாளையொட்டி, காவல்துறையினரின் தியாகங்களுக்கு வீர வணக்கங்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

காவலர் வீர வணக்க நாளையொட்டி, காவல்துறையினரின் தியாகங்களுக்கு வீர வணக்கங்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

1959ல் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும் சீனப் படைக்கும் இடையே ஏற்பட்ட போரில், இந்திய காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அக். 21 ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு இன்று காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது

காவலர் வீர வணக்க நாளை தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

அந்தவகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காகத் தம் உயிரையும் பணையம் வைத்து நம்மைப் பாதுகாக்கும் கடமையுணர்வுமிக்க காவல்துறையினரின் தியாகங்களுக்கு காவலர் வீர வணக்க நாளில் எனது வீரவணக்கங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT