தமிழ்நாடு

நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை:  நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் விங் 2.0 ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 

சமூக வலைதங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் சேர்க்கும்... ஒருவர் பலநாள் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும். என்னை பொறுத்தவரை எதிர்மறை பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட நேர்மறையான பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியானது.

அரசியவாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் அத்துமீறல், மிரட்டல், அடக்குமுறையை ஏவுகிறது பாஜக. இப்படிப்பட்ட சமூக வைரஸாதான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம். 

பாஜகவின் சாதி தன்மை தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிரானது அல்ல. இந்தியாவிற்கே எதிரானது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. 

சாதி மதத்தின் பெயரால் பிளவுப்படுசத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கக் கூடி ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக்கொண்டிருக்கிறோம். 

பாஜகவின் இப்போதைய ஒரே வேலை என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை பார்ப்பதுதான். 

என்னை மனைவி கோயிலுக்கு செல்வது அவரது விருப்பம். நான் அதை தடுக்க விரும்பவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT