தமிழ்நாடு

கடலூா், எண்ணூரில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூா், எண்ணூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

DIN

கடலூா்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூா், எண்ணூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும் என்பதால், மீனவா்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, கடலூா் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடலூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, எண்ணூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது. 

நாகை, புதுச்சேரி, நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய துறைமுகங்களிலும் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி உழவா் சந்தை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மிரட்டுவதற்காக உடலில் தீ வைத்தவா் உயிரிழப்பு

சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டம் 423 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT