முகப்பு
இந்தியா

பிரியாணி கடை ஃப்ரீஸரில் இருந்த இளைஞர் உடல்!

பிரியாணி கடை ஃப்ரீஸரில் இளைஞர் உடல் இருந்தது குறித்து..

Updated On : 2 மார்ச், 2026 at 10:00 AM
கடைகள் - கோப்புப்படம். - DPS
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 9:58 AM

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில், மூடப்பட்டிருந்த பிரியாணி கடையின் ஃப்ரீஸரில் இளைஞர் ஒருவரது உடல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

லக்னௌ அருகே பக்சி கா தாளாப் என்ற பகுதியில், இயங்கி வந்த சைவ பிரியாணி கடையின் ஃப்ரீஸரில், 35 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On : 2 மார்ச், 2026 at 9:58 AM

முதற்கட்ட விசாரணையில், பலியானவர் விஜய் பால் என்பவர் என்றும், கிஷண் பூர் மஜ்ரா என்ற பகுதியில் வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

Advertisement

மேலும், சைவ பிரியாணி கடையின் உரிமையாளர் ஷானி ராவத், தன்னுடைய தந்தை உயிரிழந்துவிட்டதால், கடையை கடந்த 4 நாள்களாக திறக்கவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறந்த போது, கடைக்குள் இருந்த ஃப்ரீஸரில் மனித உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

விஜய் பாலின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் ஒரு தினக்கூலி வேலை செய்து வந்ததாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனைவியிடமிருந்து பிரிந்து தனித்து வாழ்ந்து வந்ததாகவும், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், மரணத்துக்கான காரணம் உடல் கூராய்வுக்குப் பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

Updated On : 2 மார்ச், 2026 at 10:00 AM

Regarding the body of a young man found in the freezer of a biryani shop..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.