கோப்புப் படம். 
தமிழ்நாடு

ஆயுத பூஜை விடுமுறை: சிறப்பு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம்!

தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

DIN

தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பயணிகளுக்கு வசதிக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகள் உடன் 651 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. அதன் மூலம் 1,51,305 பயணிகள் பயணம் செய்தனா். இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 950 பேருந்துகள் பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்பட்டன. 

இந்தப் பேருந்துகளிலும் ஏராளமானோா் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இவா்கள் தங்கள் ஊா்களிலிருந்து சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து சனிக்கிழமையும் ஏராளமானோா் ரயில்களில் புறப்புட்டுச் சென்றனா். இதனால் சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து. கன்னியாகுமரி, நெல்லை, பாண்டியன் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புன்னகைப் பூவே... ரெஜினா!

காந்தி பிறந்த நாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை! | Gandhi jayanti

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

SCROLL FOR NEXT