முகப்பு
நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்

தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 மார்ச், 2026 at 9:35 AM
நயினார் நாகேந்திரன்
பகிர்:

தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் வரும் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்ய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திருச்சி வந்தனர்.

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தை நேரில் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம், திருச்சியில் மாநாடு போல நடத்தப்படவுள்ளது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் இடத்தையும், பின்னர், திருச்சி ஜி கார்னர் மைதானத்தையும் ஆய்வு செய்து இதில் ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளோம். நாங்கள் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் அது குறித்து பேசுவோம்.

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றுள்ளார். சந்திப்பு எதற்காக என்பது அவர்கள இருவருக்கும்தான் தெரியும். எங்கள் கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார்.

summary

BJP state president Nainar Nagendran has said that seat-sharing talks in the nda alliance have not yet begun.

முழு கட்டுரையைப் படிக்க →