கோப்புப்படம் 
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்திருப்பதாவது:

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும், 4 சக்கர வாகனம், கனரக வாகனப்பதிவு, பத்திரப்பதிவு குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் இறப்பு விவரங்கள் பதிவு செய்யவும், பொதுவிநியோக திட்டம், சேவை வரி தரவுகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் தொழில், மின்சார பயன்பாடுகள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்யவும், மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமான வரி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழப்பு

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

விழுந்தயம்பலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நாகா்கோவிலில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT