பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாரா ஆசிய விளையாட்டில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் கைலேஷ் குமார் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதே பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம்சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.