தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்: தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

DIN

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்; மக்கள் பீதியடைய வேண்டாம். எங்கள் சங்கத்தில் 1500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்த அறிவிப்பை தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என அறிவித்து இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT