தமிழ்நாடு

தீவிர புயலாக மாறிய ஹமூன்: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹமூன் புயலானது, தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

DIN

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹமூன் புயலானது, தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் ஹமூன் புயல் நகர்ந்து செல்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.25) காலை வங்கதேசம் டிங்கோனா தீவு - சந்திவிப் இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்

VinFast நிறுவனத்தின் முதல் காரில் கையெழுத்திட்ட முதல்வர் Stalin

விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

SCROLL FOR NEXT