கோப்புப்படம் 
தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

DIN


சென்னை: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் அக்.30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக அமைச்சா்கள், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவா்கள், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் என சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்கிறார். 

அக.30 ஆம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT