கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் வருகிற 30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழா, குரு பூஜை அரசு விழாவாக நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி தினகரன், சமுதாயத் தலைவா்கள், சமுதாய அமைப்பினா், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.

இந்த நிலையில் வரும் அக். 28, 29, 30 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏதுவாக 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: தமிழக அரசின் விசாரணை ஆணையம் தொடரும்: திமுக வழக்குரைஞர் வில்சன் பேட்டி

கரூர் பலி: ஆட்சியாளர்களின் 5 விரல்களில் ஒன்று நீதித்துறை! உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சீமான் எதிர்ப்பு!

விஜய் சேதுபதி - புரி ஜெகன்நாத் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு!

என் உச்சபட்ச கர்வம் பைசன்: மாரி செல்வராஜ்

ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு!

SCROLL FOR NEXT