தமிழ்நாடு

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ரிவர்ஸ் வாக்கிங்: வைரல் விடியோ!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிவர்ஸ் வாக்கிங் செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

DIN

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிவர்ஸ் வாக்கிங் செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

எப்போதும் தனது உடல்நலனில் அக்கறையுடன் செயல்படும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை தவறாமல் செய்து வருபவர்.

இந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று, ரிவர்ஸ் வாக்கிங் செய்யும் விடியோவை வெளியிட்டு, “வாழ்க்கையில முன்னோக்கித்தான் போகணும்....வாக்கிங்ல பின்னோக்கியும் போகலாம்தானே...” எனப் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்ற  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனை சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும், மருத்துவக் கல்வி‌ இயக்ககம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககமாக மேம்படுத்தப்பட்டு இலச்சினையை வெளியிட்டார். தமிழ்நாடு கம்பென்டியம் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ் (TCCR),  நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான மாவட்ட உள்துறை பயிற்சித்திட்டத்திற்கான தொகுப்பு கையேடை வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

சம்-சம் லட்கியே... நிகிதா சர்மா!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

SCROLL FOR NEXT