FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் அருகே பள்ளி பேருந்தில் தீ: மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சிதம்பரம் அருகே பிரபல தனியார் பள்ளி மினி பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. பேருந்தில் பயணம் செய்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Updated On : 26 அக்டோபர் 2023, 1:51 pm IST
பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்ட தீயால் முற்றிலும் எரிந்து நாசமான பேருந்து
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிரபல தனியார் பள்ளி மினி பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. பேருந்தில் பயணம் செய்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மினி பேருந்து வியாழக்கிழமை காலை பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள தங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பி.முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகே சென்று கொண்டிருந்த போது பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்ட தீ மள மளவென பேருந்து முழுவதும் பரவி எரியத் தொடங்கிய நிலையில் பேருந்தில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிரோடு மீட்கப்பட்டனர். 

இதையும் படிக்க |  தள்ளுபடி விலையில் ஆவின் இனிப்புகள்!

Advertisement

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு மீட்புத் துறை நிலைய அதிகாரி ஜெயகுமார் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் கே.முருகதாஸ், ஆர். சுரேஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். 

இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments