கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள். 
தமிழ்நாடு

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படையினர்!

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை  மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர்.

DIN

தூத்துக்குடி: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை  மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது படகில், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஆழ்கடலுக்கு விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 பேர் மீன்பிடிக்கச் சென்றனராம். 

இவர்கள் மீன்பிடித்துவிட்டு கடந்த 23 ஆம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாக கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, அவர்கள் 12 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, மாலத்தீவு கடற்படையினர் மூலம் தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசைப்படகு உரிமையாளர் சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

SCROLL FOR NEXT