கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 'திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பிரசாரம் செய்கிறார். ஆளுநரால்தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது. 

பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களின் பதவியே வேஸ்ட்தான்.

திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம். 

தமிழ்நாடு மக்கள் ஆளுநரை பொருட்படுத்தவில்லை. 

மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். 

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

SCROLL FOR NEXT