செல்வராணி / ஸ்ரீதர் 
தமிழ்நாடு

மனைவி தலையில் அம்மிக் கல்லைப்போட்டுக் கொன்ற கணவன் கைது!

காஞ்சிபுரம் அருகே மனைவி தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

DIN

காஞ்சிபுரம் அருகே மனைவி தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 45)  என்பவர் குடிபோதையில் இன்று காலையில் தனது மனைவி செல்வராணி (வயது 35) மீது அம்மிக் கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்துள்ளார்.

நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என தெரிவித்து விட்டு, எடமச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த போது  சாலவாக்கம் காவல் துறையினர் ஸ்ரீதரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்குவாரியில் வேலை செய்யும் ஸ்ரீதர், தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகள்களும் உள்ளனர். அனைவரும் வாலாஜாபாத் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

செல்வராணியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகர் மற்றும் சாலவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் கிஷோர் குமார் ஆகியோர்  விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT