காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ் மற்றும் நிர்வாகிகள்.  
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் அணி பொதுக்கூட்டம்  ஒத்திவைப்பு: பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக  ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். 

DIN

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சிப்பயணம் தொடக்கவிழா மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக  ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். 

அதிமுகவை மீட்டெடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (செப்.3) முதல் புரட்சிப்பயணத்தை தொடங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். 

இதையடுத்து ஓபிஎஸ் அணி சாா்பில் காஞ்சிபுரம் அருகே களியனூரில் ஞாயிற்றுக்கிழமை (செப். 3) புரட்சிப்பயணம் தொடக்க விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, புரட்சிப்பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். 

முன்னதாக,  காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT