தமிழ்நாடு

திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் திமுக மகளிரணி சார்பில் கனிமொழி முன்னெடுக்கும் கலைஞர்100-இல் வினாடி - வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.

செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர்100 வினாடி வினாப் போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், அறிவியக்கமாக வாழ்ந்து வழிகாட்டிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் முயற்சி  ‘கலைஞர் 100 - வினாடி வினா’போட்டி!

செப்டம்பர் 15 அன்று துவங்கவுள்ள நிகழ்வுக்கு, இன்று முதல் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்நிகழ்வைத் துவங்கி வைக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம்! காரணம் என்ன? பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

SCROLL FOR NEXT