தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (செப். 4) ஆவணித் திருவிழா கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடிப்பட்ட வீதி உலா இன்று (செப். 4) வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் ஆவணித் திருவிழாவானது (செப். 4) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ஆம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 1-ம் படி படி செப்பு ஸ்தலத்தார் ஐ.ஆண்டி சுப்பிரமணியன் ஐயர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் முதல் டீசல் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!

மகன் பிடித்த படங்கள்... மியா!

போர்நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்! காஸாவில் மீண்டும் தாக்குதல்; 33 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

2014-ல் பிரதமர் பதவிக்கு மோடியை நிராகரித்தவரா நிதீஷ் குமார்?

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம் | SC | RN Ravi

SCROLL FOR NEXT