தமிழ்நாடு

புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் நடிகர் யோகி பாபு சந்திப்பு!

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். 

DIN

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். 

அரியாங்குப்பம் கோயில் கும்பாபிஷேகத்திற்காக நடிகர் யோகி பாபு இன்று புதுச்சேரி வந்திருந்தார். இந்நிலையில், கும்பாபிஷேகம் முடிந்ததும்  அவர் பேரவை வளாகத்திற்கு வந்து முதல்வர் என் ரங்கசாமியை சந்தித்தார். 

திரைப்படங்கள் குறித்தும், யோகி பாபு குடும்பம் குறித்தும் முதல்வர் ரங்கசாமி விசாரித்தார். ரங்கசாமியை பார்த்து திரைப்படங்கள் பார்த்தீர்களா? எனது நடிப்பு பிடித்திருக்கிறதா என நடிகர் யோகி பாபு கேள்வி கேட்டார்.

அதனையடுத்து இருவரும் தேநீர் அருந்திவிட்டு பொதுவான விஷயங்கள் குறித்துப் பேசினார். பின்னர் யோகி பாபு புறப்பட்டுச் சென்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

SCROLL FOR NEXT