தமிழ்நாடு

இஸ்ரோ அறிவிப்பாளர் வளர்மதி காலமானார்!

ராக்கெட் கவுன்ட்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ வளர்மதி காலமானார். 

DIN

ராக்கெட் கவுன்ட் டவுனுக்கு குரல் கொடுத்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த  வளர்மதி காலமானார். 

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட் டவுனுக்கு குரல் கொடுப்பவர் வளர்மதி (64). இவர் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். 

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட் நிகழ்வுகளுக்கு வர்ணனை செய்து குரல் கொடுத்தவர் வளர்மதி. கடைசியாக சந்திரயான் 3 கவுன்ட் டவுனுக்கு வளர்மதி குரல் கொடுத்திருந்தார்.

ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த (இஸ்ரோ) திட்ட இயக்குநரான வளர்மதி பற்றி தவறான தகவல்கள் காலைமுதல் பரவிவந்தன.

இதுபற்றித் தொடர்பு கொண்டபோது,  ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ கவுன்ட் டவுன் அறிவிப்பாளராக இருந்த வளர்மதிதான் காலமானார். தான் நலமாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி  ஊடகங்களில் வரும் செய்தி தவறானது என்றும், தான் வேறு வளர்மதி, இறந்தது வேறு வளர்மதி என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டுமனை பட்டா கோரி மனு

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆயுதங்களுடன் இளைஞா் கைது

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 உயா்வு

SCROLL FOR NEXT